பாஸ்ட்டேக் முறையால் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும்: அமைச்சர் நிதின்கட்காரி
பாஸ்ட்டேக் முறையால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஸ்ட் டேக் முறையால் அரசுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆண்டு வருவாய் கிடைக்கும் என்றார். ஜிபிஎஸ் முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை அடுத்த 2 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அந்த திட்டம் அமலுக்கு வந்த பின் சாலையில் பயணிக்கும் தொலைவுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தினால் போதும் என்று அவர் குறிப்பிட்டார்.
பாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்ட பிறகு 80 சதவீத சுங்க சாவடிகளில் வாகனங்கள் ஒரு நிமிடம் கூட காத்திருக்காமல் பயணிப்பதாக நிதின்கட்காரி தெரிவித்தார்.
Comments