5 ஆண்டுகளுக்குப் பின் தொடங்கிய அலைக்கற்றை ஏலம்... முதல் நாளில் மத்திய அரசுக்கு ரூ.77,146 கோடி வருவாய்
5 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளில் மத்திய அரசு 77 ஆயிரத்து 146 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 7 நிறுவனங்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய 3 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன.
700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையை ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. 800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 65 சதவீதமும், 2300 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 89 சதவீதம் விற்பனையாகி விட்டது. தொடர்ந்து 2 ஆம் தேதியும் ஏலம் நடைபெற இருக்கிறது.
Comments