ஆக்சன் ஸ்டாரான லெஜண்ட் அண்ணாச்சி..! ரா ஒன் கெட்டப்பில் பைட்

0 12360
ஆக்சன் ஸ்டாரான லெஜண்ட் அண்ணாச்சி..! ரா ஒன் கெட்டப்பில் பைட்

ஹன்சிகா, தமன்னா ஆகியோருடன் தனது கடை விளம்பரத்தில் நடித்த ஜெண்ட் ஸ்டார் சரவணன், ஆக்ஷன் ஹீரோவாக ரா ஒன் ஷாருக்கான் கெட்டப்பில் நடித்துள்ள திரைப்படத்தின் சண்டைக்காட்சி புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களை கமெண்டுகளால் அதிர வைத்திருக்கின்றது.

ஒரே விளம்பரத்தில் ஹன்சிகா, தமன்னா ஆகியோரின் மார்க்கெட்டை அடிச்சி நொறுக்கியதோடு, சிங்கிள் பசங்களையும் புலம்ப விட்டவர் நம்ம அண்ணாச்சி லெஜெண்ட் சரவணன்..!

தனது விளம்பரத்தையே பிரமாண்டமாக எடுத்து வியக்க வைத்த சரவணன்., சினிமாவிற்குள் லெஜண்ட் ஸ்டாராக நுழைந்து கோடிகளை கொட்டி திரையுலகை மிரள வைத்து கொண்டிருக்கின்றார்.

இன்னும் பெயரிடப்படாத அந்த புதிய படத்தில் ரா ஒன் பட ஷாருக்கான் கெட்டப்பில் திறமை காட்டும் லெஜண்ட் ஸ்டார் சரவணன், அஜீத், விஜய் படங்களில் இடம் பெறுவது போன்ற அதிரடி சண்டை காட்சிகளில் நடந்து கொண்டே சட்டை கிழியாமல் சண்டையிட்டு ஆக்சன் ஸ்டாராக அடியெடுத்து வைத்துள்ளார்

பெசண்ட் நகர் ரவியை அவர் அட்டாக் செய்யும் ஆக் ஷன் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களை கலாய்ப்பு கமெண்டுகளால் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

 

புதிய தமிழ் சினிமாக்கள் உள்ளூரில் படப்பிடிப்பு நடத்தவே பைனான்ஸ் கிடைக்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் சூழலில், இமாலயாவிலும் , வெளி நாடுகளிலும் தனது படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிற்கு திட்டமிட்டுள்ளதால், லெஜண்ட் சரவணனை கண்டு திரை உலகினர் விழிகளை விரித்து வியந்து போயுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments