பிப்ரவரி மாதத்தில் ரூ.1,13,143 கோடி ஜிஎஸ்டி வசூல்: மத்திய நிதி அமைச்சகம்

0 1583

பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மூலம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 143 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது இது 7 சதவீதம் அதிகமாகும்.  5வது முறையாக ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருக்கிறது. மாநில அரசின் பங்காக 27 ஆயிரத்து 273 கோடி ரூபாயும், மத்திய அரசின் பங்காக 21 ஆயிரத்து 92 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த வரியாக 55 ஆயிரத்து 253 கோடி ரூபாயும் பெறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments