திமுக சார்பில் விளம்பர பதாகைகளை கடைகளில் வைப்பதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

0 4802

திமுக சார்பில் ஸ்டாலின்தான் வர்றாரு விடியல் தர போராரு என்ற வாசகங்களுடன் கூடிய விளம்பர பதாகைகளை கடைகளில் வைப்பதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 9500 கடைகளில் விளம்பர பதாகைகள் வைக்க திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கு விளக்கம் அளித்து தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, கடைகளில் விளம்பர பதாகை வைப்பதற்கு, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், அவர் தான் முடிவு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பர பதாகை வைப்பது தொடர்பான செலவுகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும் என் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments