ஜேப்பியருக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாக, ஜேப்பியரின் மகள் உட்பட 5 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

0 3442
ஜேப்பியருக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக அவரது மகள் உட்பட 5 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜேப்பியருக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக அவரது மகள் உட்பட 5 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராயப்பேட்டை கணபதி தெருவில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுடன் கூடிய நிலம் ஜேப்பியரின் மனைவி பெயரில் உள்ளது.

இந்த நிலத்தை, ஜேப்பியர் உயிருடன் இருந்த போது, சினிமா பைனான்சியர் முரளிதரனிடம் அடகு வைத்து 5 கோடி ரூபாய் கடன் வாங்கியது போல் போலி ஆவணங்கள் தயாரித்து ஜேப்பியரின் தனிச் செயலாளர்களாக இருந்த இரண்டு பேர் அபகரிக்க முயற்சித்துள்ளனர்.

இதற்கு ஜேப்பியரின் மகள் ஷீலாவும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், கூட்டுச் சதி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments