திருப்பூரில் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை சம்பவம்: வடமாநில இளைஞர்களிடம் போலீசார் விசாரணை

0 23662
திருப்பூரில் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை சம்பவம்: வடமாநில இளைஞர்களிடம் போலீசார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் கூலிப்பாளையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரத்தின் பாகங்கள் ஈரோடு அருகே மீட்கப்பட்ட நிலையில், வடமாநில இளைஞர்கள் 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பேங்க் ஆப் பரோடா வங்கிக்குச் சொந்தமான அந்த ஏ.டி.எம் இயந்திரத்தை காரில் கட்டி  கொள்ளையர்கள் பெயர்த்து எடுத்துச் சென்றனர். ஈரோடு மாவட்டம் மூங்கில்பாளையம் அருகே இயந்திரத்தை வேறு வாகனத்தில் மாற்றிக்கொண்டு காரை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர். மீட்கப்பட்ட அந்த சுமோ கார், ஈங்கூர் மின்வாரிய அலுவலகத்துக்குச் சொந்தமான கார் என்பதும் கொள்ளையர்களால் அது திருடிச் செல்லப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

ஏ.டி.எம் இயந்திரத்தை எடுத்துச் செல்ல பயன்படுத்திய லாரியை கண்டுபிடித்துள்ளதாகக் கூறும் போலீசார், ஈரோடு ராஜாஜிபுரத்தில் தங்கியிருந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments