ராஜேஸ் தாஸ் மீது பெண் எஸ்பி கூறிய புகார் தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்

0 8439
டிஜிபி ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்

காவல்துறை பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க உள்ளது.

காவல்துறையில் பணியாற்றும் பெண் எஸ்பிக்கே பாலியல் கொடுமையா? எனக் கூறி  உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் புகார் கொடுப்பதற்கு இவ்வளவு அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார் என்றால்,சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments