எல்லை பதற்றத்தை பயன்படுத்தி சீன அமைப்புகள் சதி வேலை?

0 4278
கிழக்கு லடாக்கில் எல்லைப் பதற்றம் நிலவிய சூழலை பயன்படுத்தி இந்திய மின்தொகுப்பு விநியோகத்தை சீர்குலைக்க சீனா சதி செய்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கு லடாக்கில் எல்லைப் பதற்றம் நிலவிய சூழலை பயன்படுத்தி இந்திய மின்தொகுப்பு விநியோகத்தை சீர்குலைக்க சீனா சதி செய்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த அக்டோபரில் மும்பையில் மிகப்பெரிய அளவிலான மின்தடை ஏற்பட்டு நகரமே ஸ்தம்பித்தது.

ரயில் போக்குவரத்து முடங்கியதுடன், கொரானா காலகட்டத்தில் பல மருத்துவமனைகளை மூடும் நிலையும் உருவானது.

இந்த மின்தடைக்கு சீனாவில் உள்ள ரெட்எக்கோ என்ற அமைப்பு தீங்கான மால்வேர் எனப்படும் மென்பொருளை இந்திய மின் தொகுப்பு வடங்களில் செலுத்தியதே காரணமாக இருக்கலாம் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு துவக்கம் முதல் இந்திய நிறுவனங்களுக்கு எதிரான சதி வேலைகளில் சீன அரசின் ஆதரவு பெற்ற சில அமைப்புகள் ஈடுபட்டன எனவும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments