சுங்கக்கட்டணம் தர மறுத்து தகராறில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் - சிசிடிவி காட்சிகள்
சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள சுங்கச்சாவடிக்குள் நுழைந்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுங்கக்கட்டணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட சிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஓமலூரில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சி மாநாட்டிற்கு சென்றுவிட்டு திரும்பிய அக்கட்சியினர், நத்தக்கரை பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வழங்க மறுத்து தடுப்புகளையும், அலுவலக கதவுகளையும் அடித்து நொறுக்கினர்.
இதில் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் காயமடைந்த நிலையில், தகராறில் ஈடுபட்ட 10 பேர் மீது தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியிலிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தகராறில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
Comments