காவல்துறையில் பணியாற்றும் பெண் எஸ்.பி.,க்கே பாலியல் கொடுமையா? டிஜிபி ராஜேஸ் தாஸ் மீதான புகாரை தாமாக விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

0 2776
காவல்துறை அதிகாரி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

காவல்துறை அதிகாரி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்தார். இதனால் ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

அவர் மீதான துறைசார் விசாரணைக்காகக் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி சார்பிலும் 3 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாகத் தாமாக முன் வந்து வழக்கை விசாரனைக்கு எடுத்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், காவல்துறைப் பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா எனக் கேள்வி எழுப்பினார். வழக்கைப் பிற்பகலில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments