தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா
திருப்பதி விமான நிலையத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதில் போட்டியிட உள்ள தெலுங்கு தேச கட்சியினருக்கு, மனுக்களை வாபஸ் பெறுமதாறு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசார் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக திருப்பதி மற்றும் சித்தூரில் போரட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு ரேணிகுண்டாவில் உள்ள திருப்பதி விமான நிலையத்திற்கு வந்தார்.
அவரை வெளியே செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அவர் விமான நிலையத்திற்குள் தரையில் அமர்ந்து தர்ணா செய்தார்.
Comments