தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

0 1725
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டனின்றி தெளிவாக காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments