2024ல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டி - ட்ரம்ப் பரிசீலனை
அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தானும் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல் தோல்விக்கு பின் புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடைபெற்ற பொது நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அதிபர் ட்ரம்ப், தான் புதிய கட்சி தொடங்குவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என தெரிவித்தார்.
அரசியலில் தொடர்ந்து முக்கிய இடத்தில் இருக்க தான் விரும்புவதாக தெரிவித்த அவர், புதிதாக பொறுப்பேற்றுள்ள பைடன், எந்த ஒரு திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்தவில்லை என்றார்.
Comments