இளவரசர் முகம்மதுவின் உத்தரவின் படியே கஷோகி கொலை?அமெரிக்க உளவுத்துறை அறிக்கைக்கு சவூதியில் பலர் வரவேற்பு
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, இளவரசர் முகம்மது பின் சல்மானின் உத்தரவின்படிதான் கொடூரமாக கொல்லப்பட்டார் என அமெரிக்க அரசு பகிரங்கப்படுத்தியதை, சவூதி அரேபியாவை சேர்ந்த பலர் வரவேற்றுள்ளனர்.
இந்த உண்மையை வெளிப்படுத்திய ஜோ பைடன் நிர்வாகத்திற்கு சவூதி மக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவிப்பதாக, சவூதி அரசருக்கு நெருக்கமானவர் என அறியப்படும் எழுத்தாளர் சல்மான் அல்டோசாரி (Salman Aldosary) டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சவூதி இளவரசர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என மன்னருக்கு எதிரான மனநிலையில் உள்ள பலர் கூறியுள்ளனர். அதே நேரம் இந்த குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் உள்ளது என மன்னர் பரம்பரையை சேர்ந்த இளவரசரான தலால் அல் ஃபைசல் கேள்வி எழுப்பி உள்ளார்.
Comments