முன்பதிவு செய்த இருக்கையை ஒதுக்காத ஏர் இந்தியாவுக்கு ரூ.15000 அபராதம் விதித்தது நுகர்வோர் நீதிமன்றம்

0 2937
முன்பதிவு செய்த இருக்கையை ஒதுக்காத ஏர் இந்தியாவுக்கு ரூ.15000 அபராதம் விதித்தது நுகர்வோர் நீதிமன்றம்

குறிப்பிட்ட இருக்கைகளுக்கு என்று தனியாக கட்டணம் செலுத்திய பிறகும் அதை ஒதுக்காத ஏர் இந்தியாவுக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

பெங்களூருவில் இருந்து மும்பை செல்ல ரோஹித் என்பவரும் அவரது மனைவியும் ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். தம்பதியரில் மனைவிக்கு முதுகு வலி என்பதால், கால்களை நீட்ட வசதியாக குறிப்பிட்ட 2 இருக்கைகளுக்கு தனியாக பணமும் செலுத்தினர்.

ஆனால் பயணத்தின் போது அந்த இருக்கைகள் அவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. இதை அடுத்து அவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அந்த வழக்கில் 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன், இருக்கைகளுக்காக வாங்கிய ஆயிரம் ரூபாய் தனிக்கட்டணத்தையும் திருப்பி வழங்குமாறு நீதிமன்றம் ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments