ராஜேஷ் தாசுக்கு ஆதரவாக பெண் எஸ்.பியை மடக்கிய செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன்!- பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு

0 10238
ராஜேஷ் தாஸ் மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன்

சிறப்பு டி.ஐ.ஜி ரஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை செங்கல்பட்டு செக் போஸ்டில் மறித்து அடாவடியாக நடந்த கொண்ட செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 21 ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு நலத்திட்ட பணிகளைத் தொடங்கி வைத்தார். அப்போது, முதல்வருடன் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாசும் பாதுகாப்புக்காக சென்றிருந்தார். பணிகள் முடிந்து ராஜேஷ் தாஸ் மீண்டும் சென்னைக்குத் திரும்பும் போது , மாவட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்துள்ளனர். அப்போது, பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம் தனியாகப் பேச வேண்டும் என்று காரில் ஏற்றிய ராஜேஷ்தாஸ் அவரிடம் ஆபாசமாகப் பேசி தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், பதற்றமடைந்த அந்த பெண் அதிகாரி உடனே காரை நிறுத்த சொல்லிவிட்டு கோபமாக இறங்கிச் சென்று விட்டார்.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி டிஜிபி திரிபாதி மற்றும் உள்துறை செயலாளரிடம் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கூடுதல் முதன்மை செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாலியல் புகாரில் சிக்கிக் காத்திருப்பு பட்டியலுக்கு வைக்கப்பட்டுள்ள டிஜிபி ராஜேஸ்தாஸுக்கு ஆதரவாக சென்னையில் சில போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டுள்ளதும் தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி கடந்த 22 ஆம் தேதி புகார் கொடுக்க சென்னைக்கு காரில் வந்துள்ளார். ராஜேஷ் தாஸின் உத்தரவின் பேரில், செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் மாவட்ட எஸ்.பி. கண்ணன் அதிரடிப் படை காவலர்கள் மூலம் பெண் எஸ்.பி வந்த காரை மறித்துள்ளனர். பின்னர், புகாரளிக்க வேண்டாம் என்று கூறி சமாதானப்படுத்தி திருப்பியனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பெண்.எஸ்.பியின் கார் சாவியையும் எடுத்து எச்சரித்ததாக சொல்லப்பட்டுது. ஆனாலும், அந்த பெண் அதிகாரி தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இந்த விவகாரத்தில் ராஜேஸ் தாஸுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் பெயரையும் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி உள்துறை செயலாளரிடமும் தமிழக டி.ஜி.பியிடமும் கொடுத்தார். இதனால், சமாதானம் பேசியவர்களும் விசாகா கமிட்டியின் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளனர்.

முதற்கட்டமாகப் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் ரகசியமாக விசாகா கமிட்டி விசாரணை நடத்தும் அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அடுத்தடுத்து விசாரணை நடைபெறுகிறது. இந்த நிலையில், பெண் எஸ்.பியிடம் மிரட்டும் விதத்தில் நடந்து கொண்ட செங்கல்பட்டு எஸ்.பி கண்ணண் மற்றும் ராஜேஷ் தாஸ் மீது பெண்ணை மானபங்கப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச்சட்டம் 354 மற்றும் பிரிவு 3&4 பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments