மூன்று மொழிகளில் பேசி மக்கள் பிரச்னையை கூறிய ஹரி நாடார்... நகைகளை பார்த்து வியந்த ராகுல்!

0 163802
ராகுல் காந்தியிடம் பேசும் ஹரி நாடார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடத்தில் ஹரி நாடார் , ஆங்கிலத்தில் பேசி மக்கள் பிரச்னைகளை விளக்கியது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஹரி நாடார்... இவருக்கு அறிமுகமே தேவையில்லை. நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் ஹரி நாடார், பனங்காட்டுப்படை என்ற அரசியல் கட்சியின் முக்கிய தூண். அரசியல்வாதியாக அறியப்பட்டாலும் மக்களுக்கு அவ்வப்போது நல்ல எண்டர்டெயினராக ஹரி நாடார் இருந்து வருகிறார். தற்போது, ஹரி நாடார் சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார். '2 k அழகானது காதல் ' என்ற படத்தில் அவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் சர்ச்சை புகழ் வனிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனால், வெளிவரும் முன்பே இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், 2 k அழகானது காதல் ஹிட் அடிக்குமோ இல்லையோ... 2 கே கிட்ஸ் காதல் டேமேஜ் ஆகாமல் இருந்தால் சரிதான்.

நிஜத்தில் நல்ல என்னடர்டெயினராக இருக்கும் ஹரி நாடார் வெள்ளித்திரையில் மக்களுக்கும் நல்ல என்டர்டெயினராக இருப்பார் என்று தாராளமாக நம்பலாம். இந்த படம் வெளி வந்து மக்கள் மத்தியில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்படி, தமிழக மக்களுக்கு நாளுக்கு ஒரு அதிரடி செய்தி கொடுத்து அதிர வைக்கும் ஹரி நாடார், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் ஆங்கிலத்தில் பேசி மக்கள் பிரச்னையை அழகுற எடுத்துரைத்தும் கலக்கியிருக்கிறார்.

தமிழகத்தில் ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தென் மாவட்டங்களில் 2 நாட்களாக அவர் பிரசாரத்தில் ஈடுபட , தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அவரை சந்தித்தனர். இந்த நிலையில், சுரண்டையில் ராகுல் காந்தியை சந்திக்க ஹரி வந்தார். நடமாடும் நகைக்கடை என்று பெயர் பெற்றுள்ள ஹரி நாடார் தற்போது தன் உடலில் 4 கிலோ நகைகளை அணிந்துள்ளார். ராகுல் காந்தியிடம் தன் கருத்துகளை முன் வைக்கும் வாய்ப்பு ஹரிநாடாருக்கு தனியாக வழங்கப்பட்டது. அத்தனை கூட்டத்துக்கிடையேயும் தான் அணியும் ஒரு நகைகளை கூட விடாமல் அணிந்து கொண்டு ஹரி நாடார் கூட்டத்தில் பங்கேற்றார்.

ராகுல் காந்தியிடம் ஆங்கிலம், ஆங்கிலத்தில் முடியாத போது கொஞ்சம் ஹிந்தி , ஹிந்தியில் முடியாத போது அழகு தமிழில் பேசி மக்கள் பிரச்னைகளை முன் வைத்தார். ராகுல் காந்தி ஹரி நாடாரின் பேச்சை கேட்டாரோ இல்லையோ... அவர் அணிந்திருந் நகைகளையே வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments