பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை... ஏராளமான தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து

0 5217
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது 68 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தி ஆசி பெற்றார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 68-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்தநாளுக்கு ஆசிபெறும் விதமாகவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டியும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில், மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அண்ணா நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், திருச்சியில் வருகிற 7-ந் தேதி நடைபெறும் திமுகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது மிக முக்கியமான லட்சிய பிரகடனம் வெளியிடப்பட உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோர் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments