கடல்சார் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைப்பார் -பிரதமர் அலுவலகம்
நாளை செவ்வாய்க்கிழமை முதல் 4ஆம் தேதி வரை நடைபெறும் கடல்சார் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2021 ஆம் ஆண்டிற்கான கடல்சார் உச்சி மாநாட்டை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் காணொலி மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் கடல் துறைக்கு ஒரு வரைபடத்தை காட்சிப்படுத்தப்படும் என்றும், இது உலக கடல்சார் துறையில் இந்தியாவை முன்னணியில் கொண்டு செல்ல உதவும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments