60 வயதிற்கு மேற்பட்டவர்கள், தீவிர நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி...
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் இருக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து மத்திய அரசு அறிவித்துள்ள நடைமுறைகள் குறித்த விளக்கத்தில், மேற்கண்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் வயது சான்றுக்காக ஆதார் அட்டை, ஓய்வூதிய அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த தடுப்பூசி மையத்துக்கும் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் விளக்கம் கூறப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் கொடுத்தும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் 761 தனியார் மருத்துவமனைகளிலும் 529 அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Comments