செம்பரம்பாக்கம் ஏரியில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு..தவறி விழுந்து இறந்தார்களா? அல்லது தற்கொலையா? விசாரணை தீவிரம்
செம்பரம்பாக்கம் ஏரியில், மகன் மற்றும் மகளோடு, தந்தை விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்றத்தூர் அடுத்த புது வட்டாரத்தைச் சேர்ந்த உஸ்மான் என்பவர், தனது 11 வயதுடைய மகள் மற்றும் 7 வயதுடைய மகனுடன் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்துள்ளார்.
இவர்கள் மூவரும் ஏரிக்குள் விழுந்துவிட்டதைக் கண்ட அங்கிருந்தவர்கள், அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். உயிரிழந்த நிலையில் உஸ்மானின் உடல் முதலில் மீட்கப்பட்ட நிலையில், 4 மணி நேர தேடுதலுக்கு பின்னர், நீரில் மூழ்கிய சிறுவர்களின் உடல்களை தீயணைப்புப்படையினர் மீட்டனர்.
ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த மூவரும், ஏரியில் தவறி விழுந்து இறந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments