ஈரோடு:கீழ்பவானி வாய்க்காலில் குளிக்கச் சென்று மூழ்கி இறந்த 16 வயது சிறுமி

0 2837
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் குளிக்கச் சென்று 16 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது தந்தையை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் குளிக்கச் சென்று 16 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது தந்தையை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பூரைச் சேர்ந்த செல்வகணபதி, தனது மனைவி, இரண்டு மகள்களுடன் ஈரோடு மாவட்டம் பவானியிலுள்ள உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

வழியில் நசியனூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்த நீரில் இறங்கி நால்வரும் குளிக்க முயன்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற தனுஸ்ரீ, நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்றச் சென்ற செல்வகணபதியும் நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

தீயணைப்புத்துறையினரின் தேடலில் சித்தோடு அருகே தனுஸ்ரீயின் சடலம் மட்டும் கிடைத்தது. செல்வகணபதியை தொடர்ந்து தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments