ராணுவத்திற்கு எதிராக பேசியதால் மியான்மர் ஐநா தூதர் பதவிநீக்கம் என தகவல்
மியான்மர் ராணுவத்திற்கு எதிராக பேசியதற்காக அந்நாட்டின் ஐநா தூதர், க்யா மோ துன் (Kyaw Moe Tun) பதவி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சுகியை விடுதலை செய்யக்கோரியும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று நடந்த ஐநா பொதுசபையில், ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் வகையில் ராணுவத்திற்கு எதிரான எந்தவொரு வழிமுறையும் கையிலெடுக்கப்பட வேண்டுமென அந்நாட்டின் தூதர் பேசினார்.
மேலும் அதிகாரத்தை ராணுவத்திடமிருந்து மீட்க அவர் உதவி கோரிய நிலையில் பதவி நீக்கப்பட்டதாக அந்நாட்டின் ராணுவ ஆட்சியார்கள் தெரிவித்துள்ளனர்.
Comments