மத்திய அரசு கடிதங்களை போலியாக தயாரித்து ரூ.100 கோடிக்கு மேல் மோசடி : மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளைக்கும் கடிதம் வழங்கியது அம்பலம்
போலியாக மத்திய அரசின் பரிந்துரை கடிதங்களை உருவாக்கி 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த கும்பல் கைதான விவகாரத்தில் மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளைக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பிரதமர் மற்றும் கவர்னர் அலுவலக பெயரில் போலியாக அரசு ஆவணங்களை உருவாக்கியும், அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்புவது போல் இமெயில் அனுப்பியும் பண மோசடி செய்த பெங்களூரை சேர்ந்த மகாதேவய்யா, அங்கித், ஓம் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள் மூலிகை பெட்ரோல் விவகாரத்தில் பேசப்பட்ட ராமர்பிள்ளைக்கும் மத்திய அரசின் பரிந்துரை கடிதம் வழங்கியது தெரியவந்தது.
எனவே இது குறித்து விசாரணை நடத்த நாளை காலை 10 மணியளவில் எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராகும்படி ராமர்பிள்ளைக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
Comments