கோவாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இரண்டாவது ரயில்பாதைத் திட்டம் : 140 எக்டேர் காடுகளை வழங்க மத்தியச் சுற்றுச்சூழல், வன அமைச்சகம் ஒப்புதல்
கோவாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இரண்டாவது ரயில்பாதை அமைக்கும் திட்டத்துக்கு 140 எக்டேர் காடுகளை ஒப்படைக்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடகத்தின் கேசில்ராக், கோவாவின் மர்கோவா நிலைங்யங்களுக்கு இடையே 60 கிலோமீட்டர் தொலைவுக்கு இரண்டாவது ரயில்பாதை அமைக்கும் திட்டத்தில் மகாவீரர் வனவிலங்கு காப்பகம், மொல்லம் தேசியப் பூங்கா ஆகியன பாதிப்புக்குள்ளாகும் என்பதால் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
140 எக்டேர் காப்புக்காடுகளை ரயில்வே துறைக்கு ஒப்படைக்க, அதற்குச் சமமான தொகையைக் காடுவளர்ப்புக்கு வழங்க வேண்டும் என்னும் நிபந்தனையுடன் இத்திட்டத்துக்கு மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
Comments