தெலங்கானாவில் உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல் போலீசாரால் சிறை பிடிப்பு
தெலங்கானாவில் உரிமையாளரை கொலை செய்த சேவலை காவல்துறையினர் சிறை பிடித்துள்ளனர்.
ஜக்டியல் மாவட்டத்தை சேந்த சதீஷ் என்பவர், கோவிலில் நடைபெறவிருந்த சேவல் சண்டைக்கு தனது சேவலுடன் சென்றிருந்தார்.
போட்டிக்கு தயாராக இருந்த சமயத்தில் சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி எதிர்பாராத விதமாக சதீஷின் இடுப்பில் கிழித்ததில் அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து சேவலின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சேவலையும் அதன் காலில் கட்டப்பட்ட கத்தியையும் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக சேவலை காவல்நிலையம் அழைத்துவந்து பாதுகாத்து வருகின்றனர்.
Comments