தமிழகத்தின் 8 மாவட்டங்களில் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்

0 24969
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

தரைக்காற்று வீசாததாலும், வடக்கிலிருந்து காற்று வருவதாலும் தமிழகத்தில் இருநாட்களுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும் என்றும், மதுரை, திருச்சி, தருமபுரி, நாமக்கல், கருர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments