ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

0 5130
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை

சிறப்பு டிஜிபி பதவியில் இருந்து, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பெண் எஸ்பியிடம் அவர் தவறாக நடக்க முயன்ற புகார் குறித்து விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் அடங்கிய விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதுடன், ராஜேஷ் தாசின் பதவியும் பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மீதான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

புகார் அளிக்க சென்னைக்கு வரும் வழியில், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் பெண் எஸ்பியை போலீஸ் படையுடன் தடுத்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளையும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments