காய்கறி லாரியில் சேலத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற வெடிபொருட்கள் பறிமுதல்
சேலத்தில் இருந்து காய்கறி லோடு ஏற்றிய லாரியில் மறைத்து வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வெடிபொருட்கள் கோவையில் பறிமுதல் செய்யப்பட்டன.
ரகசிய தகவலின் பேரில், தமிழக கேரள எல்லையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலத்தில் இருந்து காய்கறி ஏற்றி வந்த லாரியை சோதனையிட்டதில், பெட்டி பெட்டியாக 50ஆயிரம் ஜெலட்டன் குச்சிகள் உள்ளிட்ட வெடி பொருட்களை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் பெட்டி பெட்டியாக வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Comments