KAG டைல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக ஐ.டி.ரெய்டு: கணக்கில் காட்டாத ரூ.220 கோடி வருவாய் கண்டுபிடிப்பு
கே.ஏ.ஜி. டைல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையில், கணக்கில் வராத 220 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முறையாக வரி செலுத்தாமல், வரி ஏயுப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், நாடு முழுவதும் இந்நிறுவனத்திற்கு சொந்தமான, 20-க்கும் மேற்பட்ட இடங்களில் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
இதுவரை கணக்கில் வராத 8 கோடியே 30 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 120 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை மறைத்ததும், நூறு கோடி ரூபாய் அளவில் போலி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து வைத்திருப்பதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Comments