திருப்பூரில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை... வாகனத்தில் கயிறு கட்டி இழுத்து பெயர்த்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

0 4516
திருப்பூரில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை... வாகனத்தில் கயிறு கட்டி இழுத்து பெயர்த்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

திருப்பூர் அருகே கூலிப்பாளையத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை, பெயர்த்தெடுத்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏ.டி.எம்-க்கு நள்ளிரவில் வந்த முகமூடி கொள்ளையர்கள் 4 பேர், ஏ.டி.எம். இயந்திரத்தை வாகனம் மூலம் கயிறு கட்டி இழுத்து பெயர்த்தெடுத்து சென்றுள்ளனர்.

காலை நேரத்தில் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனத்தை கொள்ளையர்கள் விஜயமங்கலம் பகுதியில் விட்டுவிட்டு, ஏ.டி.எம். இயந்திரத்தை மற்றொரு வாகனத்தில் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் இருந்த பணம் மதிப்பை வங்கி நிர்வாகம் கணக்கிட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments