கொரோனா இன்னும் முடிந்துவிடவில்லை என்பதால் அலட்சியம் வேண்டாம் ; மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை என்பதால் அலட்சியம் வேண்டாம், தீவிரமான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் மகாராஷ்ட்ரா, கேரளா, தெலுங்கானா,மத்தியப் பிரதேசம், மேற்குவங்காளம், பஞ்சாப், குஜராத், சட்டிஸ்கர் ஆகிய எட்டு மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா நேற்று ஆலோசனை நடத்தினார்.
கொரோனா காலத்து விதிமுறைகளை உறுதியாக கடைபிடிக்கவும் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவும், தடுப்பூசி இயக்கத்தை விvரைவுபடுத்தவும் அவர் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Comments