கும்பமேளாவுக்காக புனித நதிகளில் நீராடிய பல லட்சம் பக்தர்கள்; விழாக்கோலம் பூண்டன பிரயாக் ராஜ், ஹரித்துவார் நகரங்கள்
மகா பூர்ணிமா மேளாவையொட்டி உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மாசி மாதத்தின் பவுர்ணமி நாள் மகா பூர்ணிமா என அழைக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் கும்பமேளா நிகழ்ச்சி ஆண்டுதோறும் 45 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டும் மகா மேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது.
மகா கும்ப மேளாவின் நிறைவு நாளான நேற்று ஹரித்துவார், பிரயாக்ராஜ் உள்ளிட்ட புனித நதிகள் பாயும் நகரங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரிஷி முனிவர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
இந்த விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் புனித நீராடிய பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்பட்டன.
Comments