நாட்டில் நீதிபதிகளுக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்து வருகிறது -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

0 1309
நாட்டில் நீதிபதிகளுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நீதிபதிகளுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பாட்னா உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் பேசிய அவர், சமூக வலைதளங்களில் நீதிபதிகளுக்கு எதிராக நியாயமற்ற கருத்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகள் சட்டத்தின் அடிப்படையில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், நேரடியான விமர்சனங்களை ஏற்க முடியாது என்றும் கூறினார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நாட்டில் 76 லட்சம் வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டன என்று கூறிய ரவிசங்கர் பிரசாத், வழக்கில் சாதகமான தீர்ப்பு வழங்கவில்லை என்றால் விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments