எரிபொருள் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
எரிபொருள் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய அவர், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாயைப் பாதுகாக்க மத்திய அரசு கலால் வரியை பல மடங்கு உயர்த்தியுள்ளது என்றார்.
மாநில அரசின் வரி வருவாய் குறைவாக இருப்பதால் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.
மாநில அரசின் வரிகள் மட்டும் எரிபொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் அல்ல எனக் குறிப்பிட்டார்.
Comments