”தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்த வெளிநாடுகளும் ஆர்வம்” -அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வெளிநாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
டெல்லியில் பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கையை உலகின் மிகப் பெரிய சீர்திருத்தம் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்பட ஐக்கிய அரசு அமீரகம், ஆஸ்திரேலியா, மோரீஷியல் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன என்றார்.
இந்தக் கொள்கையை வெளிநாடுகளும் செயல்படுத்த ஆர்வம் காட்டுகின்றன என்று கூறிய அவர், தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு கிடைத்துள்ளது என்றார்.
Comments