காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பலவீனம் அடைந்து வருவதாக மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு
காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருவதாக, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியிருப்பது, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-வில் "சாந்தி சம்மேளன்" நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மூத்த தலைவர் கபில்சிபல், கட்சியை பலப்படுத்தியே ஆகவேண்டும் என்ற இக்கட்டான சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய குலாம் நபி ஆசாத், காங்கிரசின் குரல், நாடாளுமன்றத்திலும், பொதுவெளிகளிலும், வலிமை பெறாது இருப்பது துரதிருஷ்டம் என்றார். நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, கட்சி தங்கள் கண்முன் பலவீனமடைவதை காண விரும்பவில்லை என்றும் உருக்கமாக குறிப்பிட்டார்.
Comments