”சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிப்பு” - விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு

0 2405
”சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிப்பு” - விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு

ந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த இயக்குனரகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், “சர்வதேச விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், சரக்கு சேவைகளுக்கான விமானங்களுக்கும், சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளுடன் இரு தரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு விமானங்களை மட்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments