இந்தியாவில் கார் உற்பத்தி, விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுசுகி..! 20 இலட்சம் கார்களை 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக தகவல்

0 5868
இந்தியாவில் கார் உற்பத்தி, விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுசுகி..! 20 இலட்சம் கார்களை 100 க்கு மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக தகவல்

மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 20 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்திய ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவில் அதிகக் கார்களை உற்பத்தி செய்வதுடன் விற்பனையிலும் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தின் வழியாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குக் கார்களை ஏற்றுமதி செய்தும் வருகிறது.

கடைசியாக எஸ் பிரசோ, சுவிப்ட், விதாரா, பிரெசா ஆகிய வகைக் கார்களைக் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தின் வழியாகத் தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது.

அத்துடன் மொத்தம் 20 லட்சம் கார்களை இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 34 ஆண்டுகளாகக் கார்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும், இப்போது 14 வகைக் கார்கள் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மாருதி சுசுகி மேலாண் இயக்குநர் கெனிச்சி அயுக்கவா தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments