KAG டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு: கணக்கில் வராத ரூ.5 கோடி பறிமுதல் என தகவல்

0 3889
KAG டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு: கணக்கில் வராத ரூ.5 கோடி பறிமுதல் என தகவல்

கே.ஏ.ஜி. டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், நாடு முழுவதும் KAG டைல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில், சென்னை தாம்பரம், கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் பல கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டதாக கூறியுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், இதுவரை கணக்கில் வராத 5 கோடி ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments