வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியதை இனிப்பு வழங்கிக் கொண்டாட வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

0 2860

ன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள்ஒதுக்கீட்டுக்கான சட்டமுன்வடிவு நிறைவேற்றியதை இனிப்பு வழங்கிக் கொண்டாட வேண்டும் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள மடலில், வன்னியர்களுக்குக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் முதற்கட்டமாகப் பத்தரை விழுக்காடு இடப்பங்கீட்டை வென்றெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றி தொண்டர்களின் வெற்றி என்றும், தொண்டர்கள் இல்லாமல் இந்தச் சமூக நீதி வெற்றியைப் பெற்றிருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் வென்றெடுக்க வேண்டிய உரிமைகள் ஏராளமாக உள்ளதாகவும், அவை அனைத்தையும் வென்றெடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments