வெளிநாட்டு பொம்மை மோகத்தை குறைக்க வேண்டும் - பிரதமர் மோடி
இந்தியாவின் பொம்மை தயாரிப்பது ஒரு தொழில் வாய்ப்பு மட்டுமின்றி, நூற்றாண்டு பழமையான பாரம்பரியத்தை வலுப்படுத்தும் செயலுமாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில், இந்திய பொம்மை கண்காட்சியை காணொலியில் துவக்கி வைத்து மோடி பேசினார்.
இந்திய கோவில்களில் காணப்படும் சிற்பங்கள் இந்தியாவின் பாரம்பரியமிக்க பொம்மை தயாரிக்கும் திறனுக்கு சான்றாக திகழ்கின்றன என மோடி குறிப்பிட்டார்.
குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மனதில் கொண்டு பொம்மைகளை தயாரிக்குமாறு உற்பத்தியாளர்களை மோடி கேட்டுக் கொண்டார்.
பொம்மைகள் குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் விதத்தில் இருக்க வேண்டும் என மோடி அறிவுறுத்தினார்.
வெளிநாட்டு பொம்மைகள் குழந்தைகளிடம் பிரபலமாக இருப்பதை சுட்டிக்காட்டிய மோடி, 70 ஆண்டுகளாக இந்திய பொம்மை படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக மோடி கவலை தெரிவித்தார்.
Comments