இளவரசர் முகம்மது உத்தரவின்படியே கஷோகி படுகொலை -அமெரிக்க உளவுத் துறை
சவூதி இளவரசர் முகம்மது பின் சுல்தானின் உத்தரவுப் படியே, சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொடூரமாக கொல்லப்பட்டார் என அமெரிக்கா முதன் முதலாக பகிரங்கமாக தெரிவித்துள்ளது.
சவூதியின் அதிகாரமிக்க இளவரசர் மீதான கொலை குற்றச்சாட்டை ஜோ பைடன் நிர்வாகம் எந்த தயக்கமும் இன்றி உறுதி செய்துள்ளது. அமெரிக்க உளவுத்துறையின் ஆவணங்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கஷோகி கொலை தொடர்பாக சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டு , கஷோகி கொலை தொடர்பாக சவூதியை சேர்ந்த 76 பேர் மீது தடைகளையும் பைடன் நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
2018 அக்டோபரில் இஸ்தான்புல்லில் சவூதி தூதரகத்திற்கு திருமண சான்றிதழ் வாங்குவது தொடர்பாக சென்ற கஷோகி கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
Comments