இளைய மகன் திருமணமான பெண்ணுடன் சென்றதால், அவமானம்; மூத்த மகனுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை!

0 29211
தற்கொலை செய்துகொண்ட தந்தை சுப்பிரமணி, மகன் சங்கர்

சேந்தமங்கலம் அருகே திருமணமான பெண்ணுடன் இளையமகன் மகன் சென்று விட்டதால், தந்தையும் மூத்த மகனும் செங்கல் சூளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே களங்காணியை சேர்ந்தவர் சுப்பிரமணி(55). மனைவியை பிரிந்த இவர் சங்கர்(25), கிருஷ்ணன்(21) என்ற தனது இருமகன்களுடன் கடந்த 6 மாதங்களாக சேந்தமங்கலம் அருகே முத்துகாபட்டியில் உள்ள குமார் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளனர். இதில் இளைய மகன் கிருஷ்ணன் ஜேசிபி இயந்திரம் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியின் மகன் கிருஷ்ணனுக்கும் சேலம் மாவட்டம் கொல்லம்பட்டியை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மனைவி சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவரும் தற்போது தலைமறைவாகி விட்டனர். தனது மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி சத்யாவின் கணவர் பாஸ்கர் சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடர்ந்து முத்துகாபட்டிக்கு வந்த சேந்தமங்கலம் போலீசார் கிருஷ்ணனின் தந்தை சுப்பிரமணி, அண்ணன் சங்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தனது மகன் வேறு ஒருவரின் மனைவியுடன் ஓடியதை அவமானமாக கருதிய சுப்பிரமணி தன் மூத்த மகன் சங்கருடன் செங்கல் சூளை அருகேயுள்ள மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அங்கு வேலை செய்தவர்கள் சேர்ந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தந்தை, மகன் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments