அரசாணை வெளியிடாமல் வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை எப்படி நடைமுறைப்படுத்த முடியும் - மு.க.ஸ்டாலின் கேள்வி
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
வன்னியர்களுக்கான பத்தரை சதவீத உள் இட ஒதுக்கீடு, வெறும் அறிவிப்பு தான் என்று சாடிய மு.க.ஸ்டாலின், அரசாணை வெளியிடாமல் எப்படி இட ஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த முடியும் என வினவினார்.
ஆட்சி முடிய போகும் நேரத்தில், அதிமுக அரசு தினந்தோறும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருவதாக விமர்சித்த மு.க.ஸ்டாலின், கடன் வாங்கி கூட மக்களுக்கு அதிமுக நல்லது செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
குடிமராமத்து பணிகளில் ஊழல் நடப்பதாகவும் ஸ்டாலின் கூறினார். இந்தியாவில் பா.ஜ.க.வினர் நடத்திய வன்முறைகளை சொல்ல ஒரு நாள் போதாது என்ற மு.க.ஸ்டாலின், தேடப்படும் குற்றவாளிகள் எல்லாம் கமலாலயத்தில் சென்று பா.ஜ.கவில் இணைவதாக விமர்சித்தார்.
Comments