மார்ச் 2ந் தேதி திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கும்

0 1980
மார்ச் 2ந் தேதி திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கும்

ட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ள திமுகவினரை வரும் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ள்ளது.

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்ட வாரியாக தினமும் இரண்டு அமர்வுகளாக இந்த நேர்காணல் நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட தேதிகளில், அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அல்லது பொறுப்பாளர்களுடன் வேட்பாளர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ உடன் அழைத்து வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments