கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என்ன..? -ஆய்வு என்ன சொல்கிறது
சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதற்கு உரிய பாதுகாப்பு இன்றி மக்கள் கூட்டம் கூட்டமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதே காரணம் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கர்நாடக அரசு, தங்களது மாநிலத்தில் கொரோனா மீண்டும் தலை தூக்க என்ன காரணம் என ஆராய பெங்களூருவில் உள்ள நிம்ஹானின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ரவியை கொரோனா உறுதி செய்தல் திட்ட அதிகாரியாக நியமித்துள்ளது.
அவர் நடத்திய ஆய்வில், இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா தொற்று மரபணு மாற்ற வைரசுகள் காரணமல்ல என கண்டுபிடித்துளார்.
ஆனால், மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க மக்கள் திரளாக கூடுவதும், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுமே காரணம் என கூறியுள்ளார்.
Comments