அதிக போர்ப் பயிற்சியில் ஈடுபடும் வீரர்களுக்கு அல்ஸைமர் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம்
அதிக போர் பயிற்சியில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு அல்ஸைமர் உள்ளிட்ட பல்வேறு நரம்பு தொடர்பான நோய்கள் உருவாகும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆய்வு நடத்திய அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி சோதனைக்கூட மருத்துவர் ஃபிரடெரிக் கிரகோரி இதனைத் தெரிவித்துள்ளார்.
அடிக்கடி ராணுவ பயிற்சியின் போது குண்டுகள் வெடித்தலைக் கேட்டலால் வீரர்களுக்கு உளவியல் மற்றும் நரம்பியல் தொடர்பான பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்பு சப்தத்தினால் மூளை நரம்பு தூண்டப்பட்டு, அதன் மூலக்கூறுகளில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறும் ஃபிரடெரிக், இதனால் வீரர்கள் அல்ஸைமர் உள்ளிட்ட நோய்களாலும் தாக்கப்படக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments