திமுக தொகுதிப் பங்கீட்டுக்குழுவுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

0 9182
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். 

திமுக தலைமையிலான கூட்டணியில் அமைந்துள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுகவில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினருடன் இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். எந்தெந்த கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கேற்ப கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி சுமூக உடன்பாடு எட்டுவதற்கு மு.க.ஸ்டாலின் குழுவினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்கவும் மு.க.ஸ்டாலின் குழுவினரை வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments